
லாபகரமான வட்டியை வழங்கி வரும் சில FD திட்டங்கள் இம்மாத இறுதியோடு அதாவது, ஜூன் 30, 2023 அன்றோடு முடிவடைகிறது. கடந்த சில வாரங்களில் ஏற்கனவே வங்கிகள் தாங்கள் வழங்கி வரும் FD திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்களை குறைக்க தொடங்கியுள்ளது. பஞ்சாப் நேஷ்னல் பேங்க் இம்மாத தொடக்கத்தில் அதன் FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்தது. தற்போது இந்த மாத இறுதியோடு முடிவடையவுள்ள 3 FD திட்டங்கள் குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்.
இந்தியன் வங்கி சிறப்பு FD
இந்தியன் வங்கி “Ind Super 400 Days” எனும் ஸ்பெஷல் FD திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த FD திட்டமானது பொதுமக்களுக்கு 7.25% வட்டி மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இத்திட்டம் ஜூன் 30, 2023 வரை மட்டுமே வழங்குகிறது.
SBI-ன் அம்ரித் கலாஷ்
எஸ்பிஐ வங்கி Amrit Kalash FD எனும் ரீடெயில் டெர்ம் டெபாசிட் திட்டத்தினை வழங்குகிறது. இத்திட்டம் 2023, ஜூன் மாத இறுதியோடு நிறைவடைகிறது. 400 நாட்கள் முதிர்வுக்காலம் கொண்ட இந்த Amrit Kalash FD திட்டத்தில் பொதுமக்களுக்கு 7.10% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.60% வட்டியும் வழங்கப்படுகிறது.
SBI-ன் வி கேர் FD
எஸ்பிஐ வங்கியின் We Care FD திட்டமானது சீனியர் சிட்டிசன்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் 5-10 வருடங்கள் வரையிலான முதிர்வுக்காலத்தை கொண்டிருக்கிறது. ஜூன் 30, 2023 வரையிலும் தகுதியுடைய நபர்கள் இந்த FD திட்டத்தில் சேர்ந்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு எஸ்பிஐ வங்கி 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஜூன் மாத இறுதியோடு முடிவடையவுள்ள மேற்கண்ட FD திட்டங்கள், தனி நபர்களுக்கு லாபகரமான முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. ஆகவே FD-யில் ஆர்வம் இருப்பவர்கள் இத்திட்டங்களை ஆராய்ந்த பிறகு முதலீடு செய்ய பரிசீலிக்கலாம்.