
ஆந்திர மாநிலத்தில் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்துவதாக தகவல் வெளியானது. இது குறித்து ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தனது X- தளத்தில் நாடு முழுவதும் உள்ள இந்து கோயில்களில் இது போன்ற பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கு “சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம்” என்ற அமைப்பை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்து தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டிருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது : கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு பயன்படுத்தியது நீங்கள் துணை முதல்-மந்திரியாக உள்ள மாநிலத்தில் நடந்துள்ளது எனவும் அதை நீங்கள் உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்கும் வழியை பாருங்கள்.
அதை விட்டுட்டு உங்கள் பிரச்சனை தேசிய அளவில் ஊதி பெரிதாக்கி மக்களை பதற்றப்பட வைக்காதீர்கள் என்று அவரின் கருத்துக்கு பதிலடியாக பதிவிட்டிருந்தார்.