
தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர்.
பின்னர் மறைவான இடத்தில் வைத்து வாலிபருடன் தகாத செயலில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அவர்களிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பயணிகள் அவர்களிடம் புகார் அளித்தனர். இதை பார்த்ததும், காவல்துறையினரை நோக்கி ஆவேசமாக வந்த பெண்கள் இங்கு சீரியல், கேமரா எதுவும் இருக்காது, எல்லாத்தையும் காலி பண்ணிடுவோம் என்று கூறினர். மேலும் அதில் ஒரு பெண் காவல்துறையினரை தள்ளிவிட்டார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த பயணி ஒருவர் நீங்கள் எந்த ஏரியா என்று கேட்டார். அதற்கு பெண்கள் நாங்கள் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள், காசிமேட்ல கோட்ரஸ் பர்மா நகரில் தனசேகர் தெரியுமா, தனசேகர் வந்தால் கிழிச்சு தொங்க விட்டுருவாரு, அவர் பெயரைக் கேட்டால் நீ உயிரையே உட்டுருவ, நீ எல்லாம் பேசவே கூடாது போயிட்டே இரு என்று கூறினார்.
அப்போது அந்தப் பயணி உள்ள போகணுமா? என்றார். இதனால் போதையில் இருந்த பெண்கள் சூடாக்கி நீ யாரு நீ இதெல்லாம் பேசவே கூடாது என்று தகாத வார்த்தையில் திட்டி அவரை அடித்து தள்ளி விட்டனர். அப்போது காவல்துறையினர் அவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் இருங்க என்று கூறி அவரை அனுப்பினார்.
ஒரு பெண் சிகரெட் பிடித்தவறே காவல் துறையினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்கள் குடிபோதையில் இருந்ததால் காவல்துறையினர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு பெண்கள் கிருஷ்ணகிரி பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.