திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்றடைப்பு அருகே இருக்கும் பூலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக பூலம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முத்துராஜ் என்பவருக்கும், நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா துணைத்தலைவர் சந்திரலேகா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதில் கோபமடைந்த முத்துராஜ் சந்திரலேகாவை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சந்திரலேகா நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.