உக்ரைன் மீது ரஷ்யா இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் போர் தொடுத்து வருகிறது. இன்னும் இந்தப் போர் நடைபெற்று தான் இருக்கிறது, முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதால் ரஷ்யாவும் உக்கிரேனுக்கு எதிராக பாலிசிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் காசான் நகரின் மீது உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 டிரான்கள் மக்கள் வாழும் கட்டிடங்கள் மீது மோதி தீப்பிடித்து எறிந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக மையத்தின் ரெட்டை கோபுரம் மீது விமானங்களையும் மோத விட்டு தாக்குதல் நடத்தியது. அதேபோன்று ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக விமான நிலையத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மொத்தம் 3 முறை அலை அலையாக டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 6 டிரோன்கள் சுடப்பட்டன. எத்தனை டிரோன்கள் தாக்குதல் நடத்தியது என்பதை குறித்து கூற முடியாது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.