டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே பெரும் போட்டி நிலவுகிறது. கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரது கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த ஆம் ஆத்மி எதிர்த்து பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவின் குண்டர்கள் செங்கல் மற்றும் கற்களால் தாக்கி அவரை காயப்படுத்த முயன்றனர் என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி கூறியதாவது, குண்டர்கள் வீசிய கற்கள் மேலே விழுந்திருந்தால் அவர் உயிரிழந்திருப்பார். அதோடு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரவேஷ் வர்மாவுடன் தொடர்புடைய ராகுல், ரோகித், சுமித் ஆகிய 3 பேரையும் அவர் குறிப்பிட்டார். இதில் ராகுல் பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவுடன் இருந்து அவரது பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது திருட்டு முயற்சி வழக்குகள் உள்ளது. ரோகித்தும் பிரவேஷ் வர்மாவுடன் தங்கி அவரது பிரச்சார வேளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மீது திருட்டு வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது. சுமித் என்பவர் மீதும் திருட்டு, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. இவர்கள் 3 பேரும் பாஜகவின் பயிற்சி பெற்ற குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள் ஆவார்கள். எனவே தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பீதியில், பாஜக இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய முயற்சிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.