பழனி முருகன் கோவிலில் வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு, அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை 650 படிகள் இருக்கின்றன. பக்தர்களின் வசதிக்காக ரோப் கார், விஞ்ச் சேவை மற்றும் யானைப் பாதை வழிகளும் உள்ளன.

ரோப் கார் மூலம் பக்தர்கள் 3 நிமிடங்களில் மலை உச்சி சென்று விட்டு, முருகனை தரிசனம் செய்யலாம். பராமரிப்பு காரணமாக, பக்தர்கள் இந்த காலகட்டத்தில் ரோப் கார் சேவையை பயன்படுத்த முடியாது என்பதால், படிப்பாதை அல்லது விஞ்ச் சேவையை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.