இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்போது மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது இளைஞர்களிடையே வீடியோ மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொது இடங்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். எனவே டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் மெட்ரோ ரயிலில் வீடியோ எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. இது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் வீடியோ எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும் இது விரைவில் சென்னையிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது