
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது அதுபோன்ற ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு மலைப் பாம்பை கண்ணாடி டப்பாக்குள் அடைத்து வைத்திருப்பதை நாம் காண முடிகிறது. கண்ணாடியின் வெளிப்புறத்தில் ஒரு நபர் இருப்பதையும் காணலாம். அப்போது அந்த மலைப் பாம்பு தான் கண்ணாடி பாக்ஸில் உள்ளதை மறந்துபோய் ஒரு வினாடியில் எதிர் முனையில் இருந்த நபரை பதம் பார்க்க முயற்சிக்கிறது. அதன்பிறகு தான் அந்த மலைப் பாம்புக்கு புரிகிறது தான் கண்ணாடி டப்பாக்குள் இருக்கிறோம் என்று. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram