டி.எம். கிருஷ்ணா தமிழகத்தை சேர்ந்த கர்நாடக இசை பாடகர் ஆவார். இவர் பாடகராக மட்டுமல்லாமல் பாடல் கற்றுத் தரும் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். சமீபகாலமாக சமூக கொள்கைகள் மற்றும் மத நல்லிணக்கத்தை குறித்த இசை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார்.

இவருக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதை வழங்க சென்னை மியூசிக் அகாடமி முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக எம். எஸ். சுப்புலட்சுமி யின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் எம்.எஸ். சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருதை டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது.

அவர் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு எதிராக பல அவதூறுகளை பேசி வருகிறார். என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் அமர்வின் கீழ் நடத்தப்பட்டது. இதற்கு தீர்ப்பளித்த நீதிபதி, பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி இன் சங்கீத கலாநிதி விருதினை டி.எம். கிருஷ்ணாவிற்கு வழங்க தடை விதித்து உள்ளதாகவும், அவரது பெயர் அல்லாமல் வேறு விருதை வழங்கலாம் எனவும் சென்னை மியூசிக் அகாடமிக்கு  உத்தரவிட்டார்.