
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் காஞ்சலி கொட்டாய் தெருவில் ராஜகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அருள்செல்வி(26) பிரசவத்திற்காக கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 1- ஆம் தேதி அருள்செல்விக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் வீட்டிலேயே வைத்து ராஜகுமாரி தனது மகளுக்கு பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தொப்புள் கொடியால் பிரச்சனை ஏற்பட்டதால் தாயும், குழந்தையும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று முன்தினம் குழந்தையின் காது மற்றும் மூக்கு பகுதிகளில் இருந்து ரத்தம் வடிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருள்செல்வி தனது குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிறந்து 20 நாட்களில் குழந்தை இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.