
வேலூர் மாவட்டத்தில் காங்கேயநல்லூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் மாணவிகள் ஒரு சிலர் வீடியோ ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர். பள்ளியின் உள்ளே வீடியோ எடுப்பது ரீல்ஸ் போடுவது போன்ற செயல்களை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற பள்ளியில் பயிலும் சக தோழி ஒருவருக்கு வளைகாப்பு நடப்பது போல் நடத்தி பத்திரிகைகள் போன்றவற்றை தாங்களே தயாரித்தும்
அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் ரீல்சாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி உள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு உள்ளார். மேலும் இதை கவனிக்காமல் இருந்த ஆசிரியர் சாமுண்டீஸ்வரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமாவிற்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.