
திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவர் பலமுறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் கடந்த 20 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர். அதன்படி இந்த வழக்கை நீதிபதிகள் அபெய். எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் சார்ஜ் மாசிக் ஆகியோர் தீர்ப்பு வழங்குகிறார்கள்.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்குவதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என அவருடைய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் முடிந்த நிலையில் 37 நாட்களுக்கு பிறகு இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர். மேலும் அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 471 நாட்களுக்குப் பிறகு தற்போது செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.