
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நிறைய இளைஞர்கள் என்னை வரவேற்றார்கள். இந்த இயக்கத்தை பற்றி இன்னும் தெரியாது. உண்மையாக கொடுங்கோலன் யார் என்றால் ? கலைஞர் கருணாநிதி மாதிரி மோசமான அரசியல்வாதியை பார்க்க முடியாது. எதற்கும் துணிந்தார்… இந்த இயக்கத்தை தொடங்கிய பிறகு, புரட்சி தலைவருக்கு பின்னால் இருக்கின்ற கட்சிக்காரர்களை எல்லாம் பொய் வழக்கு, அடி – உதை – ஜெயில்ல போடுறது. மிகப்பெரிய கொடுமை.
எத்தனை பேர் உயிர் தியாகம் பண்ணாங்க இந்த இயக்கத்திற்காக… கை இழந்து, கால் இழந்து, கண் இழந்து, இந்த இயக்கம் வளர்ந்து இருக்கிறது. இந்த இயக்கம் சாதாரணமல்ல… நெருப்பாற்றில் நீந்தி வந்தது தான் இந்த இயக்கம். 51 ஆண்டு நிறைவு செய்திருக்கிறது. அதற்கிடையிலே மக்களுடைய நம்பிக்கையை பெற்ற இயக்கம். சாதாரணமாக சொன்னார்கள்…
எம்ஜிஆர் போய், பத்தாயிரம் மைலுக்கு அந்த பக்கம் படுத்து…. புரூக்ளின் மருத்துவமனையில் படுத்து…. தானும் ஜெயித்து திரும்ப MLAயாக வந்தாரு. அது வரலாறு அல்ல. டேய் உலகத்தில் ஒரு தலைவன் தானும் ஜெயித்து, தன்னை நம்பி கூட்டணியில் இருந்த அத்தனை பேரையும் ஜெயிக்க வைத்த ஒரு கட்சி, ஒரு தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என பேசுமையாக பேசினார்.