ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆன இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் புத்தாண்டை கொண்டாட அருகிலுள்ள புத்தியேந்தல் என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் காதலர்களை மிரட்டியுள்ளனர். 4 நபர்களும் காதலனான இளைஞனை அடித்து தாக்கியுள்ளனர். பின்னர் அந்த இளம் பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் விசாரித்த போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து புத்தியேந்தல் பகுதியில் உள்ள 4 இளைஞர்கள் புவனேஷ் குமார்(27), சரண்குமார்(29), செல்வகுமார்(27), முனீஸ் கண்ணன்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 4 பேரையும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி வரை காவல்துறை பாதுகாப்பில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். சென்னை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றது அனைவரையும் பெரும் அதிர்ச்சுக்கு உள்ளாக்கியுள்ளது.