கேரளாவில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஊதாரி தனமாக சுற்றித்திரிந்துள்ளார். இதனை அந்த இளைஞரின் தந்தை கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகன் தனது தந்தைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், வாலிப வயசில் தகப்பன் பேச்சை கேட்காதவர், பிற்காலத்தில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க போகிறார்களோ என்று பதிவு செய்துள்ளார்.