தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தற்போது சென்னை ஏர்போர்ட்டில் இருந்து டெல்லிக்கு அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் சென்றுள்ளார். அவர் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கான பணிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி, புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி திட்டத்திற்கு தமிழகத்திற்கு நிறுத்தப்பட்ட நிதி போன்றவற்றை ஒதுக்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தள்ளார்.

அதேபோன்று கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு மட்டும் இன்றி கலைத்துறைக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. இதன் காரணமாக கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு சம்மதம் தெரிவிக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.