
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரௌடி சஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திது. ஏற்கனவே இந்த கொலை வழக்கில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஜித் மீது கொலை கொள்ளை, அடிதடி, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை கைது செய்த தாம்பரம் போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு ஏதேனும் உள்ளதா?? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இவர் தேடப்படும் சீசிங் ராஜாவின் கூட்டாளியாவர்.