
தமிழக அரசு தற்போது எஸ்சி மற்றும் எஸ்.டி மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆதிதிராவிடர், கிறிஸ்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த மக்களின் மருத்துவ படிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான கல்வி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 48.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாததாலும் சரியான பதிவுகள் இல்லாத காரணத்தினாலும் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்தல்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MMathiventhan pic.twitter.com/zMfKihfk3T
— TN DIPR (@TNDIPRNEWS) February 3, 2025