2023ஆம் ஆண்டின் முதல் புயல் வங்கக் கடலில் மே 8ஆம் தேதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் மே 7ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. இது மே 8ஆம் தேதி புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்படும்.