
மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. மேலும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணி தொடர்ந்து நடக்கிறது. தமிழர்கள் எத்தனை பேர் பலி என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் தெரியவில்லை.