
பிரபல இயக்குனர் மணிரத்தினம் அமரர் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இரு பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் இரண்டாம் பாகம் கடந்த 28-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அண்மையில் படக்குழு பொன்னியின் செல்வன் 2 படம் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை அறிவித்ததோடு பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனதாகவும் அறிவித்தது.
இந்நிலையில் தற்போது 2023-ஆம் ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படம் பொன்னியின் செல்வன் 2 என பட குழு தற்போது புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் பிரம்மாண்ட பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஜெயம் ரவி போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
The Chola flag flies high!#PS2 is the highest-grossing Tamil film of the year!
Book your tickets now for the blockbuster #PS2!
🔗 https://t.co/sipB1df2nxhttps://t.co/SHGZNjWhx3 #PS2Blockbuster #CholasAreBack#PS2 #PonniyinSelvan2 @arrahman @madrastalkies_ @LycaProductions… pic.twitter.com/g0YyqkoaQa— Lyca Productions (@LycaProductions) May 12, 2023