
மத்திய அரசானது பெண்களுக்காக மகிளா சம்மன் யோஜனா என்ற சேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக அதிகமாக பெண்கள் சேமிக்க தொடங்குவார்கள் என்பதால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூபாய். 2 லட்சம் வரை பெண்கள் முதலீடு செய்துக்கொள்ளலாம். அதோடு மற்ற சேமிப்பு திட்டங்களை விட இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு வரி விலக்கு பலனும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் பெண்களுக்கு மார்ச் 31, 2025 வரை மட்டுமே கடைசி வாய்ப்பு உள்ளது.
கணக்கு ஆரம்பிக்க விரும்புவோருக்கு இதே கடைசித் தேதி. இந்த திட்டத்தில் எந்த ஆபத்தும் இல்லை. இரண்டு வருட முதலீட்டிற்குப் பிறகு இந்தத் திட்டம் முதிர்வடையும். எனவே, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு முதலீட்டுப் பணத்துடன் வட்டியும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி இரண்டு வருடங்களுக்குள் நடுவில் பணம் வேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவிற்கு எடுக்கலாம். இந்த திட்டத்திற்கும், வயதுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அனைத்து வயதினரும் இதில் சேரலாம்.