
இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு மேற்கு கரையில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில் ஜோர்டான்- இஸ்ரேல் எல்லை பகுதி மிகவும் பதற்றமான சூழல் உள்ளது. இத்தகைய சூழலில் இஸ்ரேலிய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானிய வீரர்களால் இஸ்ரேல் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் குறித்த அடையாளங்கள் தெரியவந்துள்ளது.
அவர் இந்தியாவில் கேரள மாநிலத்தில் தும்பா மாவட்டத்தைச் சேர்ந்த கேப்ரியல் பெரேரா(47) என்பவர் என தெரியவந்துள்ளது. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரகம் செய்துள்ளது. இறந்தவரின் உடல் கேரளாவிற்கு கொண்டுவரும் பணியில் ஜோர்டானிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுட்டுக்கொலை செய்யப்பட்ட இந்தியரான பெரேரா ஜோடானுக்கு விசிட்டர் விசாவில் சென்றுள்ளார்.
அங்கிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போதுதான் ஜோர்டானிய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் இவரது உறவினர் எடிசன் என்பவரும் சேர்ந்து செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும் துப்பாக்கிச் சூட்டில் எடிசன் உயிர் தப்பி உள்ளார். படுகாயங்களுடன் உயிர் தப்பியவர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். எல்லையில் பதற்றமான சூழ்நிலை உள்ள போது தான் இத்தகைய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது.