
தமிழகத்தில் பைக்- டாக்ஸி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் மோட்டார் வாகன விதிகளை மீறி வணிக நோக்கத்திற்காக பைக்குகளை பயன்படுத்துவது குறித்து தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, இந்த பைக் டாக்ஸிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும். இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
எனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் இணைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று இது குறித்த ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. பைக் டாக்ஸி பயணம் செய்வோரின் பாதுகாப்பே முக்கியமானதாக கருதுகிறோம். இந்த வகை பயணங்களில் மூலம் பல லட்சம் மக்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிப்படைவதாகவும் ஒருபக்கம் கருத்துக்கள் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் இயங்குவதற்கான முக்கிய விதிமுறைகள், பைக்குக்கான உரிய உரிமம், ஓட்டுனருக்கான உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு ஆவணங்கள் ஆகியவை இருந்தால் மட்டுமே இயக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் படி இந்த பைக் டா க்ஸிகள் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க தனி குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்தி வர உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.