
திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தில் கடந்த ஒரு மாதமாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக இரண்டு பேர் சென்றனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த வாகன பாதுகாவலர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் வாகன காப்பகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிளுக்கு உரிய எந்தவித ஆவணமும் இல்லை. அந்த மோட்டார் சைக்கிள் வேறு மாவட்டத்தில் இருந்து திருடப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரண்டு பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக திருட்டு மோட்டார் சைக்கிள் திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.