என்  மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதையெல்லாம் செய்து இருக்கிறேன் என்று தைரியமாக நம்முடைய தலைவர்கள், தொண்டர்கள் உங்கள் முன்னாள் நின்று வாக்களியுங்கள் பாரத பிரதமருக்கு என கேட்பார்கள். DMKகாரன் என்ன கேட்பான் ?   மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துவிட்டார்கள் என  கேட்டார்களா?

35 மந்திரில 11 மந்திரி மீது நீதிமன்றத்திலே ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என கேட்டார்களா? 35 மந்திரியில்  அமைச்சர் பியூஸ் கோயல் சொன்னது போல இரண்டே இரண்டு பெண் மந்திரிகள். கயல்விழி அவர்களுக்கும், கீதாஜீவன் அவர்களுக்கும் இரண்டே இரண்டு பெண் மந்திரி 35ல… 5 % கூட கிடையாது. நாம 68 மந்திரில 11 மந்திரிகள் பெண்களுக்காக.. தாய்மார்களுக்காக… சகோதரிகளாக  கொடுத்து இருக்கின்றோம்.

இது பெண்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது என சொல்லி ஓட்டு கேட்டார்களா? எதை சொல்லி நம்முடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஓட்டு கேப்பார்? ஒரு வேலை மேட்டுபாலையத்துக்குள்ள தைரியமா வாக்குகேட்க வந்தா ? அண்ணன் A. ராஜா கிட்ட என்ன கேப்பிங்க?

உங்க தேர்தல் வாக்குறுதியில என்ன சொன்னிங்க?  மேட்டுபாலையத்தினுடைய அரசு மருத்துவமனை நவீனபடுத்தப்படும்.  ஒன்னும் நடக்கல. திமுக தேர்தல் அறிக்கையில என்ன சொல்லிருந்தார்கள் ? மேட்டுபாலையத்துல வாழையார் ஆட்சி மையம் அமைக்கப்படும். ஒன்னையும் காணோம். நெசவாளர்களுக்கு என்று தனியாக ஒரு கூட்டுறவு வங்கி அமைக்கப்படும், காணோம்.   நெசவாளர்களுடைய சேமிப்பு மற்றும்  பாதுகாப்பு திட்டத்துல உறுப்பினரா இருக்குறவங்களுக்கு உதவி தொகை 1000இல் இருந்து 2000ஆக உயர்த்துவோம், ஒன்னையும் காணோம்.

இதுல மேட்டுபாலையம் என்கின்ற பெயரில்  திமுகவினுடைய தேர்தல் அறிக்கை 511 தேர்தல் அறிக்கையில்…  4 தேர்தல் அறிக்கை உங்களுடைய பெயரில் திமுக தேர்தல் அறிக்கையில்  இருக்கு. எதையும் கூட  நிறைவேற்ற முடியாமல்,  திமுககாரங்க எப்படி உங்ககிட்ட வந்து ஓட்டு கேப்பாங்க ?  நாங்கள் தைரியமாக உங்கள் முன்னாடி நின்று கொண்டிருக்கிறோம், நாடு மாறிக்   கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.