ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆக்ஷத் கார்க் என்ற இளைஞன் சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையின் தவறான பக்கத்தில் எஸ்யூவி கார் ஒன்று வந்துள்ளது. இதனால் அந்த கார், பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த இளைஞனின் நண்பரான பிரத்யுமான், தனது நண்பனை எழுப்ப முயற்சித்தார். அதோடு அழுது கொண்டே அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அந்த விபத்தின் வீடியோவில், காரில் BJP ஸ்டிக்கர் இருந்தது தெரியவந்துள்ளது.