
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் 42,000 சிறுபான்மையின வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் மாற்றி வாக்களித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “திமுகவும் பாஜகவோடு வாஜ்பாய் அரசில் 5 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தது. எதற்காக நான் இதை சொல்கிறேன் என்றால், கொள்கை வேறு கூட்டணி வேறு என்பதை மறந்து விடக்கூடாது என்று அவர் கூறினார்.