திமுக சார்பில் நடந்த வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், நான் கேட்கிறேன் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறோமே அது நீங்க போட்ட திட்டமா ? விடியல் பயணம். மிஸ்டர் பழனிச்சாமி… மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி அவர்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன், பணிவோடு கேட்குறேன் விடியல் பயணம் இலவச பஸ் பேருந்து பெண்களுக்காக திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோமே,  அது நீங்க போட்ட திட்டமா ?

காலை சிற்றுண்டி திட்டம் யார் போட்ட திட்டம் ?  புதுமைப்பெண் திட்டத்தில் மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் தாறோமே, இது பழனிச்சாமி ஓட திட்டமா ?   லட்சக்கணக்கான மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ”நான் முதல்வன் திட்டம்” அதிமுக திட்டமா ? ”நம்மைக்காக 48” யார் திட்டம் ? ”இல்லன்னு தேடிய கல்வி” யார் திட்டம் ?

இதைப் பற்றி எல்லாம் பச்சை பொய்க்கார பழனிசாமிக்கு தெரியுமா ? இரண்டு லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்தோம். இது அதிமுக திட்டமா ? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகி வருகின்றார்களே இது பாஜகவின் உடைய பாதம் தாங்கியாக இருக்கிறாரே பழனிச்சாமி,  அவருடைய ஆட்சியில் நடந்ததா ? மாபெரும் தமிழ் கனவு… பரப்புரை கழகம் நடத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.