மும்பையில் பாஜக கூட்டணியான ஷிண்டே சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் கடந்த ஏழாம் தேதி அன்று மதுபோதையில் பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதில் காவேரி என்ற ஒரு பெண் உயிரிழந்தார் . இதனை அடுத்து அங்கிருந்து மிஹிர்  தலைமறைவானார். இதனை அடுத்து அவருடைய தந்தையை போலீசார் கைது செய்த நிலையில் அவரை ஆறு தனிப்படை அமைத்து வலைவீசி மும்பை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விபத்தை ஏற்படுத்திய மிஹிர் காரில் இழுத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணை காரை நிறுத்தி விடுவித்து கீழே சாலையில் கிடத்திய பிறகு கார் ஓட்டுநர் இருக்கு அருகே உள்ள அருகில் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஓட்டுனர் இருக்கையில் டிரைவர் இருந்த பிறகு அந்த பெண்ணை மீண்டும் காரை ஏற்றி இறக்கியுள்ளார் அந்த கார் டிரைவர்.  அதன் பிறகு மிஹிர் மற்றொரு காரில் தன்னுடைய காதலி வீட்டுக்கு தப்பித்து சென்றுள்ளார்.

பின் அங்கிருந்து மிஹிர் வேறொரு காரில் ஏறி போரிவாலில் உள்ள தங்களுடைய வீட்டுக்கு அவனுடைய சகோதரி அழைத்துச் சென்றுள்ளார் .அதன் பிறகு அங்கிருந்து அவனுடைய தாய், இரண்டு சகோதரிகள் அவருடைய நண்பன் என ஐந்து பேரும் நாகூர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள் . அங்கிருந்து மிஹிர் மற்றும் தன்னுடைய நண்பனோடு மும்பையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானேவின் விரார் என்ற பகுதிக்கு சென்று பதுங்கி இருக்கிறார்.

பிறகு ஐந்து பேரும் தங்களுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மிஹிர்  நண்பன் தன்னுடைய செல்போனை 15 நிமிடத்திற்கு சுவிட்ச் ஆன் செய்ததால் அவர்கள் மறைந்திருந்த இடம் தெரிந்து போலீசார் அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர் . இந்நிலையில் மிஹிர்க்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று விபத்தில் உயிரிழந்த பெண் காவேரியின் மகள் கூறியிருக்கிறார்.