குருக்ராமில் லெப்பர்ட் ட்ரெயில் சாலையில், ஒரு ஹூண்டாய் வெர்னா கார் மோதி 28 வயது மென்பொருள் டெவலப்பராக பணியாற்றிய சோமிதா சிங் உயிரிழந்தார். லக்னோவைச் சேர்ந்த சோமிதா, தனது பெண்கள் பைக் ரைடிங் குழுவுடன் நோய்டா செக்டர் 135 இலிருந்து குருக்ராமுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் மோதி இந்த துயரமான விபத்து நிகழ்ந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரையும், அதன் ஓட்டுநரையும் அடையாளம் கண்டுபிடித்து, காரை பறிமுதல் செய்துள்ளனர்.

சோமிதா ஒரு பி.எம்.டபிள்யூ. ஜி310 ஸ்போர்ட்ஸ் பைக்கை ‘லெட்ஸ் ரைடு’ குழுவுடன் சேர்ந்து ஓட்டினார். இந்த குழுவில் சமீபத்தில் தான் சேர்ந்திருந்த அவர், வார இறுதியில் நண்பர்களுடன் பைக் பயணத்திற்கு செல்லும் பழக்கம் கொண்டிருந்தார். விபத்துக்குப் பிறகு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், மருத்தவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சோமிதாவின் தந்தை மகேந்திர பாலின் புகாரின் அடிப்படையில், பட்ஷாப்பூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணம் என்ன என்பதையும், அந்த நேரத்தில் உள்ள பைக் ரைடிங் குழுவினரின் பங்களிப்பும் தெளிவுபடுத்த, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல் ஆய்வாளர் நவீன் குமார் தெரிவித்தார். மேலும்  சோமிதாவின் உடல் மறுஅறிகுறி முடித்த பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.