ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு என்பது முக்கிய போக்குவரத்து கருவியாக உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அன்று இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குழு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு மோட்டார் பட ஒன்று புறப்பட்டது. அதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த படகு சென்று கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உயிர் பிழைப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளனர்.

அப்போது படகும் ஆற்றில் கவிழ்ந்து உள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த 50 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இதில் விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அதோடு காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பெண் ஒருவர் சமையல் செய்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது.