
நேற்று ஆளுநர் மாளிகை நுழைவு வாயில அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது மிகப்பெரிய பேச பொருளானது. இதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார். இது போன்ற செயல்களை அரசு ஒருபோதும் ஏற்காது. இதுபோன்று நாங்கள் செய்யவில்லை. எங்கள் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் செய்வதில்லை. யாரோ ஒருவர் செய்திருக்கிறார்.
இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் யாரோ செய்த சதி. குற்றம் இழைத்தவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இதுபோன்ற செயலை அரசு விரும்பவில்லை என்றெல்லாம் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் கருக்கா வினோத் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர் மீது உரிய நடவடிக்கை விசாரணைக்கு பிறகு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். என்று சட்டத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது ஐந்து பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.