
காரைக்குடியிலிருந்து சென்னை நோக்கி பயணித்த பல்லவன் விரைவு ரயில், செட்டிநாடு பகுதியில் பிரேக் பழுதின் காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது. காலை 5:35 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பல்லவன் ரயில், செட்டிநாடு பகுதியை அடையும் போது பிரேக் சிஸ்டம் திடீரென செயலிழந்தது. இதனால் ரயிலின் ஒரு பெட்டியில் புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனர். உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை பாதுகாப்பாக நிறுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையின் மெக்கானிக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழுது பார்ப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது ரயில் பழுதுபார்க்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.