ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவின்  அமன் ஷெராவத் 13- 5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் இதுவரை இந்தியா வென்ற வெண்கல பதக்கங்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. சிறப்பாக விளையாடி. முதல் பாதியில் 6- 3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார் அமன் . இரண்டாவது பாதியில் தொடக்கத்தில் அவரது மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது இருப்பினும் துணிச்சலுடன் களமிறங்கி அமன் ஷெராவத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இன்னும் சில புள்ளிகளை பெற்றார். இறுதியில் 13 – 5 என்ற கணக்கில் டேரியன் டாய் க்ருஷை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றார் அமன் ஷெராவத்