சிவகாசியில் 51 லட்சம் மோசடி செய்ததற்காக பாஜக நிர்வாகி சத்யராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார். ஜவுளிக்கடை தொழிலதிபர் ஒருவரிடம் நிலம் வாங்கித் தருவதாக கூறி சத்யராஜ் 51 லட்சம் பெற்றிருக்கிறார். பின்னர் நிலமும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியதால் சத்யராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.