
நாடு முழுவதும் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முதல் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் அளவில் சரிந்து வருகிறது. அதன்படி அதானி குழும பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.90,000 கோடி அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதாவது பாஜக பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்தது தான் அதானி குழும பங்குகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியான நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் உச்சத்தை தொட்டது. ஆனால் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பல இடங்களில் பின்னடைவை சந்தித்தது தான் காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.