
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது. அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
உட்கட்சி பூசல்கள் காரணமாக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இருதரப்பினர் மாறி மாறி அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.