அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது 100 கோடி நில மோசடி தொடர்பான வழக்கு இருக்கிறது. இந்த வழக்கில் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி காவல்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் ஜாமினில் வெளியே வந்த நிலையில் 100 கோடி நில மோசடி தொடர்பான வழக்கில் எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருடைய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தற்போது தலைமறைவாக இருந்த சேகரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.