தமிழகத்தில் பாமக கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருக்கும் நிலையில் நிறுவனர் ராமதாஸ் தற்போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது நிலவுகிறது.

இந்த மோதல் வெளிப்படையாகவே தெரிந்த நிலையில் பின்னர் இருவரும் சமாதானமானதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு தானே தலைவராவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதனால் இனி அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இளைஞர்களை வழி நடத்துவதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் ராமதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.