தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் பஸ் பாஸ் முறை இருக்கிறது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குமாநகரப் பேருந்தில் மற்றும் பயணிக்கும் படி இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் நிலையில் போக்குவரத்து துறையில் சில குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி மற்ற பேருந்துகளிலும் பயணிகள் பஸ் பாஸ் பெற்று கொள்ளும் முறையும் இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது ஏசி பேருந்துகளிலும் பஸ் பாஸ் முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் மாதம் 2000 கட்டண முறையில் ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து மாநகர பேருந்துகளிலும் பஸ் பாஸ் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். தற்போதுள்ள ஆயிரம் பாஸ்களில் ஏசி பேருந்து தவிர்த்து மற்ற பேருந்துகளில் பயணம் செய்யலாம். மேலும் இந்த புதிய நடைமுறை ஜூன் மாதத்திற்குள் அமலாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.