தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் ஒரு செயல்படும் அம்மா உணவகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் உணவகங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள கருவிகள் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றையும் மாற்றுமாறும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.