
மதிமுக அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும், மதிமுக எதற்காக உருவாக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி வாரிசு அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், கட்சி பொறுப்புகள் மட்டுமல்லாமல், அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.