
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் சிக்கிய நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிரபல இயக்குனர் நெல்சன் மனைவி மோனிகாவுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதாவது இந்த வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் ஆதரவாளரான மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் தற்போது மோனிஷாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த கட்டமாக இயக்குனர் நெல்சனிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.