
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் முகிலன், அப்பு மற்றும் நூர் விஜய் என 3 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 பேரும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்துள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.