நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலையில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.