நாட்டில் இனி மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள் வருகிற 26 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் கட்டாயம் சேர வேண்டும்.

ஒருவேளை படிப்பில் சேர விருப்பமில்லை என்றாலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால் அவர்கள் அபராதம் இன்றி வெளியேறி கொள்ளலாம். மேலும் அனுமதிக்கப்பட்ட தேதிக்கு பிறகு படிப்பை கைவிட்டால் அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.