
தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா இன்று பதவி ஏற்க உள்ளார். சென்னை ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட இலாகா குறித்து வெளியிடப்படும். மேலும் இதில் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில் தற்போது அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.