தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில் இது புயலாக வலுப்பெறவுள்ளது. நேற்று புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திறந்த நிலையில் பின்னர் 12 மணி நேரம் கழித்து தான் புயல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை பெங்கல் புயல் உருவாக இருப்பதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு நாளை மறுநாள் ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இன்று மாலை முதல் நாளை காலை வரை புயல் உருவாகும் என்று தற்போது வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.